யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் புத்த விகாரை, சிங்கள மாணவர் ஒன்றியம் என்பவை அமைக்கப்பட வேண்டும் என்று எழுதப்பட்ட பதாகைகள் நேற்று இரவோடு இரவாக பல்கலைக்கழக வளாகத்தில் ஒட்டப்பட்டுள்ளது.
திட்டமிட்ட ரீதியில் இச் சுவரொட்டிகள் ஒட்ப்பட்டுள்ளது. எனினும் இச் சுவரொட்டி ஒட்டப்பட்டது தொடர்பாக மாணவர்களுக்கு சம்மந்தம் எதுவும் இல்லை, வெளியில் இருந்து வந்தவர்களாலே இச் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டது என்று யாழ்.பல்கலைக்கழக அனைத்து பீட மாணவர் ஒன்றியம் அறிவித்துள்ளது.