இன்றைய தினம் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்திருந்த ஜப்பான் தூதுவர் கீனிச்சி சுகனுமா ஸ்ரீலங்கா அரசின் வடமாகாண ஆளுனர் றெஜினோல்ட் கூரேவை அவரது அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.
வடமாகாணத்தின் அபிவிருத்தி செயற்பாடுகள் மற்றும் தற்போதைய நிலமைகள் தொடர்பில் இங்கு கலந்துரையாடப்பட்டது.
இதேவேளை இலங்கை அரசாங்கத்தினது உதவpபெறும் கொள்கையில் ஒரு தூணாக உள்ள அவசர உதவி தேவைப்படும் இடங்களை அபிவிருத்தி செய்தல் எனும் நிகழ்ச்சித்திட்டத்தின் யாழ்ப்பாணத்திலுள்ள இரண்டு பாடசாலைகளின் கல்வி அபிவிருத்திக்கென ஜப்பான் அரசாங்கத்தினால் 26மில்லியன் ரூபா நிதியுதவியும் இதன்போது ஜப்பான் தூதுவர் வழங்கி வைத்தார்.
அதன்படி யாழ். முத்துத்தம்பி மத்திய மகா வித்தியாலயத்தில் விசேட தேவையுடைய மாணவர்களுக்கென கல்விக்கூடம் அமைப்பதற்கும் வகுப்பறைத்தொகுதியின் அபிவிருத்திக்குமென 11.6மில்லியனும், அச்சுவேலி புனித திரேசா மகளிர் கல்லுரியில் வகுப்பறை கட்டடதத்தொகுதி அமைப்பதற்கு 14.4 மில்லியன் ரூபாவுமாக 26மில்லியன் ரூபாவை வழங்குவதற்கான ஒப்பந்தத்திலும் தூதுவர் கையெழுத்திட்டார்.