யாழ் மல்லாகத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் சுமார் 40 பேர் கைது செய்யப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மல்லாகம், சகாய மாதா ஆலயத்துக்கு அருகில் நேற்றுமுன்தினம் இரவு துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. அதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார்
இந்த துப்பாக்கி சூட்டுச் சம்பவத்துக்கு முன்னர் குழு மோதல் நடந்ததாக கூறப்படுகின்றது.
இந்தச் சம்பவம் தொடர்பில் 3 இளைஞர்கள் கைது செய்யப்பட்ட நிலையில் மல்லாகம் நீதவானின் இல்லத்துக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
இதேவேளை இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய 40 பேர் வரையில் கைது செய்யப்படவுள்ளதாகவும், அவர்கள் கைது செய்யப்படும்வரை சந்தேநபர்களை விளக்கமறியலில் வைக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது