யாழ் வானை வட்டமிட்ட கிபீர்

யாழ்ப்பாணத்தில் 7 வருடங்களின் பின்னர் கிபிர் போர் விமானம் இன்றும் 2 ஆவது முறையாக அதிகாலை 6.30 மணியளவில் யாழ்.குடாநாட்டை மும்முறை வட்டமிட்டுள்ளது.

இதனால் குறித்த பெரும் சத்தத்தைக் கேட்டே பெரும்பாலான மக்கள் திடீரென கண் விழித்தனர். நேற்று முன்தினம் கூட பிற்பகல் 2.10 மணியளவில் இந்த கிபிர் விமானம் யாழ்.குடாநாட்டு வான்பரப்பில் பேரிரைச்சலுடன் பறந்தது. ஆனால், இன்றைய தினம் யாழ்.குடாநாட்டு வான்பரப்பில் மும்முறை கிபிர் போர் விமானம் வட்டமிட்டதால் மக்கள் மத்தியில் சிறிது பரபரப்பு உருவாகி இருந்தது.

கிபீர்பரபரப்புபேரிரைச்சல்போர்யாழ்ப்பாணம்வான்பரப்புவிமானம்
Comments (0)
Add Comment