சிறீலங்காப் படைகளால் கடத்தப்பட்ட, காணாமல் போன உறவுகளைத் தேடி கதறிய சிறுமியையும் தாயையும் விடுதலை செய்யக் கோரி கவனயீர்ப்பு ஒன்றுகூடல் யேர்மனி பேர்லின் நகரில் எதிர்வரும் திங்கள் கிழமை ஒழுங்குசெய்யப்பட்டுள்ளது.
தொடரும் இனஅழிப்பின் , தமிழர்களின் கையறுநிலையின், தாயகத்தில் தமிழர்களின் இன்றைய நிலையின் ஒட்டு மொத்த குறியீடாக மாறிப்போனார்கள் விபுசிகாவும் அவளது அம்மாவும்… இக்கவனயீர்ப்பு ஒன்று கூடலில் அனைத்துத் தமிழ் உறவுகளையும் அணிதிரளுமாறு அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது.