ரணிலின் கருத்து மக்களுக்கு நம்பிக்கையீனத்தை விதித்துள்ளது!

நொந்து போயி­ருக்கும் எமது மக்­களை நம்­பிக்­கை­யீ­ன­மாக்கும் செய­லா­கவே ஸ்ரீலங்கா பிரத­மரின் கருத்து உள்­ளது என தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சிவ­ஞானம் சிறி­தரன் தெரி­வித்­துள்ளார்.

வட­ப­கு­திக்கு பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க வரு­கையின் போது அவ­ரது உரை தொடர்­பிலும் மற்றும் தற்­போ­தைய நிலை தொடர்­பிலும் கேட்­கப்­பட்­ட­போதே இதனைத் தெரி­வித்தார்.

அவர் மேலும் தெரி­விக்­கையில்,

பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க கூறிய கருத்­துக்களை பொறுப்­பற்ற கருத்­துக்­க­ளா­கவே எமது மக்கள் பார்க்­கின்­றனர்.

மிக முக்­கி­ய­மாக நொந்து போய் அழி­வு­களைச் சந்­தித்து இருக்கும் நிலையில் மக்கள் இருக்கும் போது காணாமல் போன­வர்கள் இறந்து போயி­ருக்­கலாம் என ஒரு நாட்டின் தலைவர் பேசு­வது தமிழ் மக்­களை பொறுத்தவரையில் நல்­லி­ணக்க அரசின் நம்­பிக்­கையை இல்­லாது செய்துள்­ளது.

ஏற்­க­னவே நம்­பிக்­கை­யீ­னங்­க­ளுடன் வாழும் மக்­க­ளிடம் இத்­த­கைய பேச்சு அதீத நம்­பிக்­கை­யீ­னங்­களை உரு­வாக்­கி­யி­ருக்­கி­றது. குறிப்­பாக, சம்­பூரில் 812 ஏக்கர் விடு­விக்­கப்­பட்­டி­ருக்­கி­றது. அது முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷவின் மைத்­துனர் கைப்­பற்­றிய காணியைத் தான் இந்த அரசு விடு­வித்­தி­ருக்­கி­றது.

ஆனால் அனல் மின் நிலை­யத்­திற்­கான காணிகள் விடு­விக்­கப்­ப­ட­வில்லை. மேலும் வலி.வடக்கு, யாழ்ப்­பா­ணத்­திலும் இரா­ணு­வத்­திடம் உள்ள காணிகள் விடு­விக்­கப்­ப­டு­வ­தற்­கான நல்ல செய்­திகள் வெளிவ­ர­வில்லை. ஏற்­க­னவே தெல்­லிப்­ப­ழையில் காணி விடு­விப்பு தொடர்பில் உண்­ணா­வி­ரதம் நடை­பெற்­ற­வேளை அதில் கலந்து கொண்ட ரணில் விக்­கி­ர­ம­சிங்க ஆட்சி மாற்றம் பதவி நிலைக்கு வந்­த­வுடன் இவற்றை விடு­விப்போம் என்று சொல்­ப­வர்கள் தற்­போது காலத்தை இழுத்­த­டிப்­பதும் அல்­லது அதற்­கான கார­ணத்தை கூறு­வதும் வாடிக்­கை­யாகி தமிழ் மக்­களை அகதி வாழ்க்­கைக்கு வைத்­தி­ருப்­ப­தையே விரும்­பு­கிற நிலை­யைத்தான் தோற்­று­விக்­கி­றது. அதே­நேரம் கிளி­நொச்­சியில் இடம்­பெற்ற காணாமல்போனோர் கூட்டம் ஒன்றில் முன்னாள் ஜனா­தி­பதி மகிந்த ராஜபக் ஷவிற்கும் இத்­த­கைய நிலை வந்தால் தான் இவர்­க­ளுக்கு காணாமல் போன­வர்கள் நிலை புரியும் என்று கூறி­ய­வர்கள் இதற்கு நட­வ­டிக்கை எடுப்போம் எனக் கூறி­ய­வர்கள் நாங்கள் இந்த விட­யத்தில் தீர்வைக் காணுவோம் எனக் கூறி­ய­வர்கள் ரணில் விக்­கி­ர­ம­சிங்க காணாமல் போன­வர்கள் இறந்து போயி­ருப்­பார்கள் எனக் கூறு­கின்றார். ஆகையால் காணாமல் போன­வர்கள் எவ்­வாறு இருந்­தார்கள். அவர்­களை யார் வைத்­தி­ருந்­தார்கள். எத்­தனை பேர் வைத்­தி­ருந்­தார்கள் என்­பதை வெளிப்­ப­டுத்த வேண்டும்.

ஒரு நாட்டின் தலைவர் பொறுப்­பான முறையில் ஒரு இனத்­தின் ­மீது மேற்­கொள்­ளப்­பட்ட இன அழிப்பு தொடர்­பாக இப்­பொ­ழுதும் எள்­ளி­ந­கை­யா­டு­வது போன்று எதேச்­சா­தி­கார முறையில் வார்த்­தை­களைக் கொட்­டு­வது தொடர்ந்து 60 ஆண்டு கால இலங்கை அர­சி­யலில் பௌத்த – சிங்கள சிந்­த­னை­க­ளோடு அர­சியல் தலை­வர்கள் மேற்­கொண்ட வார்த்­தை­க­ளையே பிர­தமர் சொல்­வதைப் போல் உள்­ளது.

காணாமல் போன­வர்­களைத் தேடு­வோ­ருக்கு கணவன், மனைவி, பிள்­ளை­களை ஒப்­ப­டைத்­த­வர்கள் குடும்­பங்­க­ளுடன் சர­ண­டைந்­த­வர்கள் தொடர்பில் யார் பதில் கூறு­வது. குடும்பம் குடும்­ப­மாக குழந்­தை­க­ளுடன் சர­ண­டைந்­த­தற்கு பல ஆதா­ரங்கள் இருக்கும் நிலையில் தற்­போதும் இக்­கு­டும்­பங்கள் தமது ஆதா­ரத்­தோடு கண்­ணீ­ரு­டனும் வாழ்­கி­றார்கள். இவர்களுக்கு பிரதமர் பதில் சொல்லவேண்டும்.

ஜனாதிபதியும் பிரதமரும் சம ஆளுமைக்குள் தங்களுக்குள் இருக்கக்கூடிய அரசியல் போட்டிகளை மையப்படுத்திக் கொண்டு தீர்வை நோக்கிய பயணத்தில் இழுத்தடிப்புக்களையும் தவறான வார்த்தைப்பிரயோகத்தையும் வெளிப்படுத்துவது அரசின் மீது இன்னும் இன்னும் வெறுப்பை வெளிக்காட்டுகின்றது என்றார்.

கருத்துநம்பிக்கையீனத்தைமக்களுக்குரணிலின்விதித்துள்ளது
Comments (0)
Add Comment