காணாமல் போனவர்களின் குடும்பங்களுக்கு அனுசரணையாக செயற்பட்டு வந்த நிலையில் பயங்கரவாத புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவின் பிரகாரம் விடுதலை செய்யப்பட்டுள்ள ருக்கி பெர்னாண்டோ மற்றும் அருட்தந்தை பிரவின் மகேசன் ஆகியோரி கடவுச்சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இதேவேளை இவ்விருவரும் எந்தவொரு ஊடகங்களுக்கும் கட்டாயம் கருத்து எதனையும் தெரிவிக்க கூடாது என்றும் பயங்கரவாத புலனாய்வு பிரிவினர் நீதிமன்றத்தின் ஊடாக தடையுத்தரவு பெற்று கொண்டுள்ளதாக அவர்களுடைய சட்டத்தரணிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.