ரெலோ இயக்கத்தின் தலைவராக செல்வம் அடைக்கலநாதன்

தமிழீழ விடுதலை இயக்கத்தின் 9ஆவது மாநாடு திருகோணமலை நகரசபை மண்டபத்தில் நேற்று மாலை இடம்பெற்றது. இதில், கட்சியின் தலைவராக செல்வம் அடைக்கலநாதன் மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இந்த மாநாட்டில், உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் இனப்பிரச்சினை காரணமாக தமிழ் மக்கள் விரட்டியக்கப்பட்ட போதும் தமிழீழ விடுதலை இயக்கம் தமது செயற்பாட்டை தமிழ் இனத்திற்காக தொடர்ந்தும் மேற்கொண்டது என தெரிவித்தார்.

இறுதி யுத்தத்தின் போது தமிழ் மக்களுக்காக பல்வேறு அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் தமது கட்சி குரல் கொடுத்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும், தமது கட்சி பணம் மற்றும் பதவிகளுக்கு ஆசைப்படவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அவ்வாறு, நினைத்திருந்தால் கடந்த அரசாங்கத்தின் போது அமைச்சு பதவியொன்றை பெற்றிருக்க முடியும் என அவர் குறிப்பிட்டார். 12 ஆண்டுகள் தொடர்ச்சியா நாடாளுமன்றத்தில் தமிழீழ விடுதலை இயக்கத்தின் பிரதிநிதிகள் அங்கத்துவம் பெற்றிருந்த போதிலும் இன விடுதலைக்காக எந்தவொரு அமைச்சு பதவியினையும் பெற்றுக்கொள்ளவில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அடைக்கலநாதன்இயக்கம்செல்வம்தமிழீழம்திருகோணமலைமாநாடுவிடுதலை
Comments (0)
Add Comment