வடக்கில் ஆரம்பிக்கப்பட்ட மின் உற்பத்தித் திட்டம் முழு அளவில் தோல்வி

வடக்கில் ஆரம்பிக்கப்பட்ட மின் உற்பத்தித் திட்டம் முழு அளவில் தோல்வியடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. “வடக்கு ஜனனீ” என்ற மின் உற்பத்தித் திட்டமொன்றை அரசாங்கம் ஆரம்பித்திருந்தது. யாழ் குடாநாடு உள்ளிட்ட வடக்கிற்கு மின்சாரத்தை விநியோகம் செய்யும் நோக்கில் வெளிநாட்டு உதவியுடன் இந்த திட்டம் ஆரம்பிக்கப்பட்டிருந்தது.

மின் உற்பத்தி நிலையத்தின் விசைச் சுழலியின் உடைந்து போன காரணத்தினால் இவ்வாறு மின் உற்பத்தி தடைப்பட்டுள்ளதாக மின்சார சபையின் உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த மின் உற்பத்தி நிலையம் ஆரம்பிக்கப்பட்டு ஓராண்டு காலமே பூர்த்தியாகின்றது. விசைச் சுழலி உடைந்தால் திருத்திக் கொடுப்பதற்கான உத்தரவாத காலம் பூர்த்தியாகியுள்ளது.

கொள்ளளவை விடவும் அதிக வேகத்தில் விசைச் சுழலி சுழல விடப்பட்டதனால் சேதம் ஏற்பட்டுள்ளது. இதனை பழுது பார்ப்பதற்கு பெருமளவு செலவு ஏற்படும் என தெரிவிக்கப்படுகிறது. தற்போது வடக்கின் மின்சார தேவைக்காக தேசிய நீரோட்டத்திலிருந்து மின்சாரம் பெற்றுக்கொள்ளப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

“வடக்கு ஜனனீ”அரசாங்கம்ஆரம்பித்திருந்ததுஉற்பத்தித்என்றதிட்டமொன்றைமின்
Comments (0)
Add Comment