வடக்கில் நடந்த நிதி மோசடிகள் தொடர்பில் விசாரணை!

தமிழ் தேசியக்கூட்டமைப்பின் ஆளுகைக்குள் இருந்த வல்வெட்டித்துறை, பருத்தித்துறை, சாவகச்சேரி மற்றும் வவுனியா நகரசபைகள் மற்றும் பொதுசன ஜக்கிய மக்கள் முன்னணி வசமிருந்த யாழ்.மாநகரசபை ஆகியவற்றில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பமாகவுள்ளது.

2012 மற்றும் 2013ம் ஆண்டு காலப்பகுதிகளில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் தொடர்பில் முதலமைச்சரால் நியமிக்கப்பட்ட விசாரணைக்குழுவின் அறிக்கையின் பிரகாரம் இவ்விசாரணைகள் மேற்கொள்ளப்படவிருப்பதாக தெரியவருகின்றது.
குறிப்பிட்ட நகரசபைகள் மற்றும் மாநகரசபையில் பாரிய நிதி மோசடிகள் இடம்பெற்றதாகப் பங்காளிகளாலேயே குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருந்தது. சபைகள் ஒழுங்காக இயங்க முடியாத நிலையும் ஏற்பட்டிருந்தது.
குறிப்பாக கூட்டமைப்பின் வசமிருந்த நகரசபைகளில் பல மில்லியன் மோசடிகள் இடம்பெற்றதாகப் பங்காளிக்கட்சிகள் குற்றஞ்சாட்டியிருந்ததுடன் அவற்றினை சுமூகமாக இயங்கவிடாது குழப்பியடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

கட்சிகள்கூட்டமைப்புநகரசபைநிதிமுதலமைச்சர்மோசடிவடமாகாணம்விசாரணைக்குழு
Comments (0)
Add Comment