வடக்கு மாகா­ணத்­தில் தனி ஆட்­சி நடக்­கின்­றது – மகிந்த ராஜ­பக்ச..

வடக்கு மாகா­ணத்­தில் தனி ஆட்­சியே நடக்­கின்­றதாகவும், அங்கு சட்­டம் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­ப­டு­வ­தில்லை  என்றும் முன்­னாள் அரச தலை­வர் மகிந்த ராஜ­பக்ச குற்­றசுமத்தியுள்ளார்.

யாழ்ப்­பா­ணத்­தில் கரும்­புலி தினம் கடைப்­பி­டிக்­கப்­பட்­டமை தொடர்­பில் ஊட­க­வி­ய­லா­ள­ரொ­ரு­வ­ரால் எழுப்­பட்ட கேள்­விக்­குப் பதி­ல­ளிக்­கை­யி­லேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

வடக்­கில் எதைச் செய்­தா­லும் பிரச்­சி­னை­யில்லை என்ற நில­மையே தற்­போது காணப்­ப­டு­கின்­றதாகவும்,  அது தனி நாடு போலவே செயற்­பட்­டு­வ­ரு­கின்­றதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தெற்­கில் சம்­ப­வங்­கள் நடந்­த­தால்­தான் சட்­டம் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றது என்றும், வடக்­கில் அவ்­வாறு சட்­டம் கம்­பீ­ர­மாக செயற்­ப­டு­வ­தில்லை என்பதால் தான் கரும்­புலி தினத்­தைக்­கூட கடைப்­பி­டிக்­கும் நிலை உரு­வா­கி­யுள்­ளதாகவும் ’ மகிந்த கூறி­யுள்ளார்.

இதேவேளை கரும்­பு­லி­கள் தினம் கடைப்­பி­டிக்­கும் அள­வுக்கு வடக்கு நிலமை மோச­ம­டைந்­துள்­ள­தாக இரண்டு தினங்­க­ளுக்கு முன்­னர், மகிந்த அணி நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் விமல் வீர­வன்ச தெரி­வித்­தி­ருந்­தமையும் குறிப்பிடத்தக்கது.

கரும்புலிகள் தினம்தனிநாடுமகிந்தவடக்கு
Comments (0)
Add Comment