Designed by Iniyas LTD
வடக்கு மாகாணத்தில் தனி ஆட்சி நடக்கின்றது – மகிந்த ராஜபக்ச..
வடக்கு மாகாணத்தில் தனி ஆட்சியே நடக்கின்றதாகவும், அங்கு சட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதில்லை என்றும் முன்னாள் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச குற்றசுமத்தியுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் கரும்புலி தினம் கடைப்பிடிக்கப்பட்டமை தொடர்பில் ஊடகவியலாளரொருவரால் எழுப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
வடக்கில் எதைச் செய்தாலும் பிரச்சினையில்லை என்ற நிலமையே தற்போது காணப்படுகின்றதாகவும், அது தனி நாடு போலவே செயற்பட்டுவருகின்றதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தெற்கில் சம்பவங்கள் நடந்ததால்தான் சட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது என்றும், வடக்கில் அவ்வாறு சட்டம் கம்பீரமாக செயற்படுவதில்லை என்பதால் தான் கரும்புலி தினத்தைக்கூட கடைப்பிடிக்கும் நிலை உருவாகியுள்ளதாகவும் ’ மகிந்த கூறியுள்ளார்.
இதேவேளை கரும்புலிகள் தினம் கடைப்பிடிக்கும் அளவுக்கு வடக்கு நிலமை மோசமடைந்துள்ளதாக இரண்டு தினங்களுக்கு முன்னர், மகிந்த அணி நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.