வடமாகாண சுகாதார சேவைகள் நியதிச் சட்டம் நிறைவேற்றம்

வடமாகாணத்திற்கான சுகாதார சேவைகள் திணைக்களத்தை ஸ்தாபிப்பதற்கான, சுகாதார சேவைகள் நியதிச் சட்டம் வடமாகாண சபையில் ஏகமனதாக நேற்று நிறைவேற்றப்பட்டுள்ளது. குறித்த நியதிச் சட்டம் நிறைவேற்றப்படுவதன் ஊடாக பொதுமக்களுக்கு இலகுவான சுகாதார சேவைகளை வழங்க முடியும் என சபையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சுகாதாரச சேவைகள் நியதிச் சட்டத்தின் 2ம், 3ம் வாசிப்புக்காகவும் குழுநிலை விவாதத்திற்காகவும் சபையில் எடுத்துக்கொள்ளப்பட்டிருந்தது. இதனையடுத்து, குறித்த நியதிச்சட்டம் சபையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

சுகாதாரம்சேவைகள்திணைக்களம்நியதிச்சட்டம்நிறைவேற்றம்வடமாகாணம்ஸ்தாபித்தல்
Comments (0)
Add Comment