யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்திற்குள்ளிருந்து அண்மையில் மீள்குடியேற்றத்திற்கு அனுமதிக்கப்பட்ட பகுதிகளை மீள்குடியேற்ற அமைச்சர் டீ.எம்.சுவாமிநாதன் இன்றைய தினம் நேரில் பார்வையிட்டுள்ளார்.
இன்றைய தினம் தெல்லிப்பளை பிரதேச செயலகத்திலிருந்து மேற்படி பகுதிகளுக்கு அமைச்சர் சென்றிருந்தார்.
இதன்போது சாந்தை சந்தி மற்றும் ஒட்டகப்புலம் ஆகிய பகுதிகளை அவர் பார்வையிட்டு, நிலைமைகளை கேட்டறிந்தார். இதேவேளை கீரிமலை பகுதியில் கடற்படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள காணிகளையும் அமைச்சர் பார்வையிட்டார்.