வவுனியாவில் உண்ணா விரதப்போராட்டம்!

வவுனியாவில் அமையவுள்ள பொருளாதார மையத்திய நிலையத்தினை வட மாகாணசபையில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் பிரகாரம் அமைக்குமாறு கோரி வவுனியா மாவட்ட உள்ளுர் விளைபொருள் விற்பனையாளர் சங்கம் இன்று(திங்கட்கிழமை) காலை முதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது.
வவுனியா உள்ளுர் விளைபொருள் விற்பனை சந்தைக்கு முன்பாக இடம்பெற்றுவரும் இந்த உண்ணாவிர போராட்டத்தில், உள்ளுர் விளைபொருள் விற்பனையாளர்கள், விவசாயிகள், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான சி. சிவமோகன், கே. கே. மஸ்தான், வட மாகாணசபை உறுப்பினரான ஏ. ஜெயதிலக, சிறிடெலோ கட்சியின் செயலாளர் நாயகம் கா. உதயராசா உள்ளிட்ட பல அரசியல்வாதிகளும் கலந்துகொண்டுள்ளனர்.
இந்த போராட்டத்திற்கு உரிய தீர்வு கிடைக்காத பட்சத்தில் தொடர்ந்தும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாகவும் உள்ளுர் விளைபொருள் விற்பனையாளர் சங்கத்தினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதேவேளை, பொருளாதார மத்திய நிலையத்தினை அமைப்பதற்கான இடத்தினை ஒதுக்கீடு செய்வது தொடர்பில் தொடர்ந்தும் இழுபறி நிலை காணப்படுகின்றமைக் குறிப்பிடத்தக்கது
உண்ணாவிரதம்பொருளாதார மையம்போராட்டம்வவுனியாவிற்பனையாளர் சங்கம்
Comments (0)
Add Comment