வவுனியாவில் டெங்கு நோயால் ஒருவர் பலி!

வவுனியாவில் டெங்கு தொற்று ஏற்பட்டு இன்று (07) காலை ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாகவும் ஒருவாரத்தில் இம்மாதம் 1ஆம் திகதியிலிருந்து 7ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 24பேர் டெங்கு நோய் தொற்றுக்குள்ளாகியுள்ள நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் பொது சுகாதாரப்பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக மேலும் தெரியவருகையில், கடந்த 1ஆம் திகதியிலிருந்து இன்று 07 வரையான ஒருவார காலப்பகுதியில் வவுனியாவில் டெங்கு நுளம்பு தொற்றுக்குள்ளாகிய 25பேர் இனங்கானப்பட்டுள்ளதாகவும் அதில் கற்பகபுரம் பகுதியைச் சேர்ந்த இராசரட்ணம் சுகந்தன் 33வயதுடைய குடும்பஸ்தர் 4ஆம் திகதி வைத்திசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற நிலையில் இன்று காலை 5மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாகவும் இவர் அடிக்கடி கொழும்பிற்குச் சென்று வருவதாகவும் காலம் தாழ்த்தி வைத்திய சிகிச்சை மேற்கொண்டுள்ளதால் டெங்குத் தொற்றிற்குள்ளாகி சிகிச்சை மேற்கொள்ளத்தவறியுள்ளதாலே உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
வவுனியாவில் அதிகமானவர்கள் வெளி மாவட்டங்களுக்குச் சென்று திரும்புபவர்களுக்கே அதிக டெங்கு தொற்று எற்பட்டுள்ளதாகவும் இவ்வாறு வெளி மாவட்டங்களுக்கு குறிப்பாக கொழும்பு சென்று வருபவர்களுக்கே அதிகம் டெங்கு தொற்றுக்குள்ளாகியுள்ளதாகவும் தங்கு வேலைகளுக்குச் செல்பவர்கள் காச்சல் எற்பட்டால் உடனடியாக அருகிலுள்ள வைத்தியசாலையில் சிகிச்சை மேற்கொள்ளுமாறும் தெரிவித்துள்ளனர்.
<p>காச்சல் எற்பட்டால் உடனடியாக வைத்திசாலைக்குச் சென்று சிகிச்சை மேற்கொள்ளுமாறும் டெங்கு தொற்று இனங்கானப்பட்டால் அதற்கான சிகிச்சைகளை உடன் மேற்கொள்ளுமாறும் காலம் தாழ்த்தி சிகி;ச்சை பெறுவதை தவிர்த்துக் கொள்ளுமாறும் மேலும் தெரிவித்துள்ளனர். காலம் தாழ்த்தி சிகிச்சை மேற்கொள்வதால் டெங்கு நோய் அதிகம் பரவி டெங்கு நோய்pனைக் கட்டுப்படுத்த முடியாமல் சென்றுள்ளதாலே குறித்த நபர் உயிரிழந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

காய்ச்சல்டெங்குபலிமருத்துவமனைவவுனியா
Comments (0)
Add Comment