வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தில் விளையாட்டுத்துறை ஆசிரியராக கடமையாற்றிய ந. சுந்தராங்கன், மாணவர்களின் பாடசாலைக்கு ஒவ்வாத சீருடை தொடர்பாகவும், வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளரின் மகனது சீருடை தொடர்பாகவும் நடவடிக்கை எடுத்தமையால் உடனடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் ஆசிரியரின் இடமாற்றத்தை நிறுத்துமாறு கோரியே மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தை ஆரம்பித்த மாணவர்கள் பின்னர் வலயக்கல்வி அலுவலகத்தின் வாயிலையும் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதன்போது வலயக்கல்விப்பணிப்பாளரே நித்திரையா, எமது ஆசிரியரை எமக்குத்தா, ஒழுக்கம் தெடர்பாக நடவடிக்கை எடுத்தால் இடமாற்றம் செய்வாயா, அதிகார துஸ்பிரயோகம் செய்யாதே, மகாவிததியாலயத்தை வீழ்த்த நினைக்காதே என்ற கோசங்களை எழுப்பியதோடு பதாதைகளையும் தாங்கியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஏ -9 வீதியில் இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றமையால் பொலிஸார் போக்குவரத்து கடமைகளில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.