வவுனியா, தெற்கிலுப்பைக்குளம் பிள்ளையார் கோவிலடிப் பகுதியில் குழு மோதலில் ஈடுபட்ட ஆறு பேரை தாம் கைது செய்துள்ளனர் என்று வவுனியாவில் நிலைகொண்டுள்ள சிறீலங்கா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த திங்கட்கிழமை குறித்த கோவிலில் பூசைகள் இடம்பெற்ற போதே இக் குழுமோதல் இடம்பெற்றது. இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வந்த வவுனியா சிறீலங்காப் பொலிஸார் நேற்று முன்தினம் செவ்வாய்கிழமை இருவரை கைது செய்து நீதிமன்றில் முற்படுத்தினர். இருவருக்கும் பிணை வழங்கப்பட்டது.
இதனையடுத்து இச் சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் நான்கு பேரை நேற்று புதன்கிழமை கைது செய்துள்ளனர்.