இது தொடர்பாக மேலும் தெரியவருகையில்,
வவுனியா மூன்றுமுறிப்பு பகுதியிலுள்ள வயல் காணியை துப்பரவு செய்து கொண்டிருக்கும் போது இன்று (13.09) காலை 11.45 மணியளவில் அப்பகுதியில் வெடிக்காத நிலையிலிருந்த 3 கிரினெட் குண்டுகளை அவதானித்துள்ளனர்.
இதையடுத்து ஸ்ரீ பொலிசாரிடம் மேற்கொண்ட முறைப்பாட்டினையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிசார் அப்பகுதியை பார்வையிட்டபோது மேலும் அப்பகுதியில் மோட்டார் குண்டுகள் இருப்பதாக சந்தேகம் கொள்வதாகவும், நீதிமன்றத்தின் அனுமதியைப் பெற்று அப்பகுதியை மேலும் அகழ்வு பணியை மேற்கொள்ளவிருப்பதாகவும், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றதாகவும் ஸ்ரீ பொலிசார் தெரிவித்துள்ளனர்.