வவுனியா இராணுவ முகாமுக்குள் நிர்வாணமாக புகுந்த இளைஞனால் பதட்டமடைந்த இராணுவம்!

வவுனியா மூன்றுமுறிப்பு இரானுவ முகாமினுள் இன்று (24.12.2017) அதிகாலை நிர்வானமாக புகுந்த இளைஞனினால் சற்று பதட்ட நிலை காணப்பட்டதாக இரானுவத்தினர் தெரிவித்தனர்.

இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்

வவுனியா ஏ9 வீதியில் அமைந்துள்ள மூன்றுமுறிப்பு இரானுவ முகாமினுள் முழு நிர்வானமாக இளைஞரோருவன் புகுந்ததினால் சற்று பதட்ட நிலை காணப்பட்டதுடன் குறித்த இளைஞன் இராணுவத்தினரால் சுற்றிவளைக்கப்பட்டு கைது செய்யப்பட்டு குறித்த இளைஞருக்கு உடையணிவித்து வவுனியா பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

எனினும் குறித்த இளைஞன் என்ன காரணத்திற்காக முகாமிற்குள் உள்நுழைந்தார்? எவ்வாறு நுழைந்தார்? என்ற விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருவதுடன் 18 வயதுடைய முகமட் நசீர் என்ற இளைஞனே இவ்வாறு நிர்வாணமாக முகாமினுள் நுழைந்ததாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இராணுவம்இளைஞன்நிர்வாணம்வவுனியா
Comments (0)
Add Comment