வ
36 அகவையுடைய சுகன்யா அகிலன் வவுனியா வடக்கு கல்வி வலயத்தைச் சேர்ந்த புதியவேலர் சின்னக்குளம் பாடசாலையில் கல்வி கற்பிக்கும் ஆசிரியை எனவும், இவர் பாடசாலை முடிந்து வவுனியாவில் உள்ள தனது வீட்டிற்கு உந்துருளியில் சென்று கொண்டிருந்தபோதே குறித்த விபத்து சம்பவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்து நடந்தவுடன் அங்கிருந்து தப்பியோட முயன்றதாக கருதப்படும் இந்தியப் பிரஜையாகிய சாரதியை சிறீலங்கா காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சம்பவ இடத்தில் கூடிய பொதுமக்கள் டிப்பர் வாகனத்தை எடுத்துச் செல்லவிடாமல் தடுக்க முயன்றதுடன் விபத்தில் உயிரிழந்தவருக்கு நியாயம் வழங்கப்பட வேண்டும் என்றும் அதனை சிறீலங்கா காவல்துறை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் கோரினர்.
சம்பவ இடத்திற்குச் சென்ற வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனிடம் விபத்து நடைபெற்ற விதம் பற்றி எடுத்துக் கூறிய வவுனியா தலைமையக காவல்துறை சாரதி கைது செய்யப்பட்டுள்ளார் என்பதை உறுதிப்படுத்தியதுடன் இந்தச் சம்பவம் தொடர்பில் உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளித்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.