வவு-அன்பகத்தில் சிறுமி சடலமாக மீட்பு!

வவுனியா மன்னார் வீதியில் அமைந்துள்ள அமைந்துள்ள அன்பகமொன்றிலிருந்து நேற்று (29.06.2017) மாலை 4.30மணியவில் தூக்கில் தொங்கிய நிலையில் சிறுமியின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,
வவுனியா மன்னார் வீதியில் அமைந்துள்ள அமைந்துள்ள அன்பகமோன்றில் தாய் மற்றும் தந்தையினை இழந்து 11வயதுடைய சிறுமியோருவர் அடைக்கலம் புகுந்து வசித்து வருகின்றார். குறித்த சிறுமி நேற்று  (29.06.2017) காலை பாடசாலைக்கு சென்று விட்டு மதியம் இல்லத்திற்கு திரும்பிய சிறுமி மாலை 4.30மணியளவில் அன்பகத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலம் மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த சிறுமியின் மரணம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
பிரேத பரிசோதனைகளுக்காக குறித்த சிறுமியின் சடலம் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

அன்பகம்சடலம்சிறுமிவவுனியா
Comments (0)
Add Comment