வாக்குவாதம் முற்றியதில் வாள்வெட்டுக்கும்,அடிகாயங்களுக்கும் இலக்கான மூவர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ். வடமராட்சி தும்பளைப் பகுதியில் கடந்த வியாழக்கிழமை இரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவத்தில் ஆண்கள் இருவரும், பெண்ணொருவரும் படுகாயமடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதனை தொடர்ந்து நேற்றைய தினமும் குறித்த இருதரப்பினருக்குமிடையே தர்க்கம் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
மேற்படி சம்பவம் தொடர்பி ல் பருத்தித்துறைப் பொலிஸார் விசாரணைகள் மேற்கொண்டுள்ளனர்.