விக்னேஸ்வரன் நிலைப்பாடு தொடர்பில் சி.சிறீதரன்.

முதலமைச்சரிடம் இருந்து சாதகமான முடிவு கிடைக்குமானால் பிரேரணையை வாபஸ் பெறப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தெரிவித்துள்ளார்

வடக்கு மாகாண சபையின் சமகால நிகழ்வு தொடர்பாக இன்று எமது செய்திச்சேவை வினாவிய போது அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்,

இந்த விடயம் தொடர்பாக இன்று மாலை 3.00 மணித்தியாலம் வரை முதலமைச்சருடன் நானும் மன்னார் நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ்சும் பேசியுள்ளோம். சம்பந்தன் ஐயாவுடனும் பேசியிருக்கிறேன்.சம்பந்தன் ஐயா முதலமைச்சருக்கு மின்னஞ்சல் மூலம் தகவல் பரிமாறியுள்ளார் இருவரும் சாதகமான மனநிலையில் உள்ளனர்.

இந்த விடயங்கள் தொடர்பாக தலைவர்கள் பேசியிருக்க வேண்டும் ஆனால் பேசவில்லை இப்போது பேசியுள்ளார்கள்.

கூடுதலாக அனைவரும் இணைந்தே இது தொடர்பாக முடிவுகள் எட்டப்படும் என நினைக்கின்றேன்.

இந்த தீவில் நாம் ஒரு சிறிய தேசிய இனம் நாம் போராடியது, போராடி இழந்த உயிர்களுக்கு நாம் செய்யும் செயற்பாடாகா இதனை அனைவரும் மனதில் நிறுத்தி செயற்படவேண்டும்.

மேலும், நல்லதே சிந்திப்போம் நல்லதே நடக்கும் என நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் குறிப்பிட்டார்.

சம்பந்தன்சி. சிறீதரன்மன்னார் நாடாளுமன்ற உறுப்பினர்முதலமைச்சர்
Comments (0)
Add Comment