விசுவமடுவில் கடனை திருப்பி செலுத்த முடியாத இளம் தாய் தற்கொலை!

கடனை திருப்பிச்செலுத்த முடியாத இளம் தாயொருவர் முல்லைதீவில் தற்கொலை செய்துகொண்டுள்ளார். முல்லைத்தீவு விசுவமடு இளங்கோபுரம் தேராவிலை சேர்ந்த அம்பிகைபாலன் ஜெகதீஸ்வரி (வயது 32) என்பவரே தற்கொலை செய்துள்ளார்.
தற்கொலை செய்யும் முன் அவர் எழுதியதாக கடிதத்தில் கணவன் கைவிட்டுச் சென்றுள்ளதாகவும் தனது காணியை விற்று தான் பெற்ற கடன்களை செலுத்துமாறும் கோரியுள்ளார்.
தனது இறுதி கிரிகைகள் முடிந்ததும் பிள்ளைகளை சிறுவர் விடுதியில் சேர்த்ததுவிடுமாறும் கோரியுள்ளார். குறித்த பெண்னுக்கு பன்னிரண்டு, மூன்று வயதில் இரு பெண் பிள்ளைகளும், எட்டு வயதில் ஒரு மகனும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

கடன்சிறுவர் விடுதிதற்கொலைதாய்பிள்ளைகள்பெண்விசுவமடு
Comments (0)
Add Comment