வித்தியா கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது?

புங்­கு­டு­தீவு பாட­சாலை மாணவி வித்­தி­யாவின் படு­கொலைச் சம்­ப­வத்தில் மேலும் ஒருவர் தொடர்­பு­பட்­டுள்­ள­தா­கவும் அவரை கைதுசெய்­வதற்­கான நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­வ­தா­கவும் விசா­ரணை மேற்­கொண்டு வரும் ஸ்ரீலங்கா குற்றப் புல­னாய்வுப் பிரி­வினர் ஊர்­கா­வற்­றுறை நீதி­மன்றில் தெரி­வித்­தனர்.

இதே­வேளை, குறித்த வழக்கு விசா­ர­ணையை இம் மாதம் 25ஆம் திகதி வரை ஒத்­தி­வைக்க ஊர்­கா­வற்றுறை நீதிவான் நீதி­மன்ற நீதிபதி வை.எம்.எம்.றியால் உத்­த­ர­விட்­டுள்ளார்.

மாணவி வித்­தியா படு­கொலை தொடர்­பான வழக்கு விசா­ரனை நேற்­றைய தினம் ஊர்­கா­வற்­றுறை நீதி­மன்றில் விசா­ர­ணைக்­காக எடுத்து கொள்­ளப்­பட்­ட­போதே குற்­றப்­பு­ல­னாய்வு பிரி­வினர் மேற்­கண்­ட­வாறு நீதி­ப­தி­யிடம் தெரி­வித்­தனர்.

மாண­வியின் படு­கொலை தொடர்பில் பத்து சந்­தேக நபர்கள் வரை கைது செய்­யப்­பட்டு அவர்­க­ளுக்கு எதி­ராக வழக்கு விசா­ர­ணைகள் ஊர்­கா­வல்­துறை நீதி­மன்றில் இடம்­பெற்று வந்­தது.

இந்­நி­லையில் கடந்த மாத­ம­ளவில் இக்­கொ­லையை நேரில் பார்த்த சாட்­சியம் என்ற வகை­யிலும் வேறு வகையில் இக்­கொ­லை­யோடு தொடர்­பு­பட்­ட­வர்கள் என்ற சந்­தே­கத்தின் அடிப்­ப­டையில் மேலும் இருவர் கைது செய்­யப்­பட்­டி­ருந்­தனர்.

இந் நிலை­யி­லேயே இக் கொலை­யோடு தொடர்­பு­பட்­டி­ருக்­கலாம் என்ற சந்­தே­கத்தின் அடிப்­ப­டையில் மேலும் ஒரு நபரை கைது செய்­ய­வுள்­ள­தாக குற்­றப்­பு­ல­னாய்­வு­து­றை­யினர் மன்றில் தெரி­வித்­துள்­ளனர்.

குறித்த வழக்கு தொடர்­பாக பூர­ண­மான விசா­ர­னை­களை மேற்­கொள்­வ­தற்கு அதிக கால அவ­காசம் தேவை­யெ­னவும் மன்றில் குற்­றப்­பு­ல­னாய்வு பிரிவு தெரி­வித்­தி­ருந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது.

நேற்­றைய வழக்கு விசா­ர­னையின் போதும் படு­கொலை தொடர்­பாக சேக­ரிக்­கப்­பட்ட மற்றும் கொலை நடந்த இடத்தில் இருந்து பெற்­றுக்­கொள்­ளப்­பட்ட தட­யங்கள் தொடர்­பான அறிக்­கைகள் எத­னையும் குற்­றப்­பு­ல­னாய்வு பிரிவு மன்றில் சமர்­பிக்­கப்­பட்­டி­ருக்­க­வில்லை.

இத­னை­ய­டுத்து இவ் வழக்கு விசா­ர­ணையை இம் மாதம் 25ஆம் திகதி வரை ஒத்­தி­வைக்க ஊர்­கா­வல்­துறை நீதிவான் நீதி­மன்ற நீதிவான் வை.எம்.எம்.றியால் உத்­த­ர­விட்டார்.

இதே­வேளை நீதி­மன்ற விசா­ர­ணைகள் மற்றும் நட­வ­டிக்­கைகள் தொடர்­பாக விமர்­சிக்­கவோ நிறு­வ­னங்­களில் முறை­யி­டவோ கூடாது எனவும் அவ்­வா­றான விட­யங்கள் ஏதேனும் இருப்பின் அது தொடர்பாக நீதிமன்றிலேயே தெரிவிக்கமுடியும் எனத் தெரிவித்த நீதிவான், அவ்வாறில்லாமல் செயற்படுமிடத்தில் அச் செயற்பாடுகள் தொடர்பாக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என சந்தேக நபர்களை எச்சரித்தார்.

ஊர்காவற்துறைகுற்ற புலனாய்வுகைதுகொலைநீதிபதிநீதிமன்றம்போலீஸ்விசாரணைவித்தியா
Comments (0)
Add Comment