வீதிகளை புனரமைக்கக்கோரி விசுவமடு மக்கள் ஆர்ப்பாட்டம்!

முல்லைத்தீவு மாவட்டம் விசுவமடுப்பகுதியில் இன்று (புதன்கிழமை) கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. அப்பகுதி வீதிகைள புனரமைக்கக் கோரியே இந்த கவனயீர்ப்பு போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.

தமது பிரதேசத்தின் உரிய முறையில் புனரமைக்கப்படாத நிலையில் வேறு பிரதேசங்களுக்கு வீதி புனரமைப்பதற்காக விசுவமடுப்பிரதேசத்தில் கிரவல் அகழ்ந்து செல்லும் பாரவூர்திகளால் வீதிகள் மேலும் சேதமடைவதாக தெரிவித்த மக்கள் குறித்த பாரவூர்திகளை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், விசுவமடு பிரதேசத்தின் உள்வீதிகளை திருத்துவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆர்ப்பாட்டம்புனரமைப்புமக்கள்முல்லைத்தீவும்காவட்டம்விசுவடுவீதிகள்
Comments (0)
Add Comment