வீழ்ந்துவிட்டது பெண்கள் வீரம்என்று யாரும் எண்ணாதீர்.

அழகிய தாய் நாட்டில்
கண்ணே என்று நீ அணைக்க
பெண்ணாய் என்னை பெற்றதிற்காய்
அம்மா
உன்னை எனக்கு பிடிக்கும்.
எங்கோ நான் உயிர்விட்டு-என்
உடல் புதைந்தாலும்
ஈழப்பெண்ணாய்-என்
இதயம் துடிக்கும்.
பாரதி தேடிய பெண்களை
பாரதம் கண்டதோ தெரியவில்லை,
பாரே போற்றிடும் பெண்களாய்
ஈழத்தில்-நாம்
வீரமாய் நின்றதை மறக்க முடியவில்லை.
அன்னையும் பெண்தான்-என்னை
அடுப்படி அனுப்பினாள்.
அண்ணனாய் வந்தான்
பெண்ணடிமை
இங்கில்லை என்றான்.
மண்மீட்க வா தங்கை என்று
பெண்களுக்கும் சம பங்கு தந்து,
விண்ணதிர சாதனைகள்-எம்
மண்மேலே செய்யச்செய்தான்.
சாவோடு விளையாடி
சரித்திரம் எழுதிவிட்டு
சந்தணப்பேளைக்குள் உயிர்வாழும்
மங்கையர் வீரம் சொல்லும்-எம்
மண்ணின் மகளீர் பெருமை.
தமிழ் பண்பாடு எனும்போது
தலைகள் குனிவோம்.வீரமாய்
தலைகள் குனியாது
பெண்கள் படைகொண்டு
படையெடுத்து பகை வெல்வோம்.
வரன்களுக்கு தட்ச்சனை கொடுக்கவில்லை.
ஆடவரும் அடிமையாய்-எம்மை
ஆழ நினைக்கவில்லை.
காடேறினோம்,கடலேறினோம்,
நள்ளிரவில் ஈழ நாட்டில்
அச்சமின்றி நாம் நடப்போம்.
பிண பாடையோடு படலை மட்டும்
பெண்கள் சென்ற காலம் மாறியது,
நாமே தோழியரின் உடல் சுமந்து
துயிலும் இல்லம் புகுந்து
வித்துடல்கள் விதைத்து வந்தோம்.
எங்களின் தேசம் அதுவே-ஈழ
பெண்களின் சுவாசம்,
வீசும் காற்றில் வீரம் இருந்தது.
விடுதலைப்போரில் பெண்ணடிமை
அழிந்தது-அங்கு
மலர் வைத்து மண்பார்த்து நடந்த
மங்கையரை,
விண்ணதிர விடுதலை
போருக்கு அழைத்து
பெண்ணடிமை அழித்த-எங்கள்
அண்ணனே உன்னை தேடுகிறோம்.
விடுதலைப்போர் முடிந்தது
வீழ்ந்தது பெண்கள் வீரம்-என்று
மகிழ்ந்து யாரும் எண்ணவேண்டாம்.
எங்கள் கண்கள்
கலங்கி நின்றாலும்
நெஞ்சில் நெருப்பெரிய
ஈழ பெண்களாய்
நிலைத்திருப்போம்.
உலகமே அழியும்வரை……

பெண்கள் வீரம்மண்மீட்க
Comments (0)
Add Comment