அம்மா உன் நினைவோடு – மண்வாசணை கவிதை

அம்மா உன் நினைவோடு

மெழுகிய அடுப்படி…
மெல்லிய சுள்ளிகள்..
பன்னாடை….
தெறித்த மண்ணெய்…
குச்சியின்.. உரசலில்
அன்றைய .. பொழுதுகள்..
ஆரம்பம்..
குவளையின் தேனீரோடு..
குழைத்துண்ணும்..
திரிபோசாவும்…
முகத்தில் கரி
பிரண்டும்…
தன் முகத்தில்
கறுப்பிருந்தும்…
என் முக அழகு
பார்ப்பாய் அம்மா…!!!
தனியழகு விபூதி
தொட்டுத் தடவும் ..
சுகங்கள்……!
அன்றைய பொழுதின்..
ஆசீர்வாதங்கள்….!
அடுப்படிப் பாத்திரங்கள்..
பிள்ளைகள்… உடுப்புகள்..
தோய்த்துக் காயும்..
கொடியும் நீயும் தானா…
வாழ்க்கை…
காயும் உன் நினைவுகளும்..
கனவுகளும்…
பிள்ளைகளாகி…
போர் என்னும் அரக்கன்
முழுங்கிய…உயிர்கள்?
வளர்த்தெடுத்த ..
கைகள்… வாரிக்கொட்டிய..
வாய்க்கருசி…
உருசியாகப் படைத்த
அம்மாக்கள்…
உயிரோடு இறக்கும்..
நிசங்கள்…!!
நெஞ்சைப் பிழிகிறது
அடிப்படி.. புகைக்கூடு.
பாத்திரத்தோடு…
அணைகிறது…அன்னை
என்னும்… தியாகம்

Comments (0)
Add Comment