வட்டுக்கோட்டைப் பிரதேசத்தில் வெள்ள இடரால் பாதிக்கப்பட்ட மக்களை நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் நேரில் சென்று பார்வையிட்டார்.
மேலும் வட்டுக்கோட்டை அறவொளி சனசமூக நிலையத்தில் மக்களின் அவலநிலையைக் கேட்டறிந்த நாடாளுமன்ற உறுப்பினர் இது குறித்து உரிய அதிகாரிகளுடன் பேசி நடவடிக்கை எடுப்பதாகக் கூறினார்.