வேலை கிடைக்கவில்லை என்ற விரக்தியில் பட்டதாரி இளைஞன் யாழில் தற்கொலை..

யாழ்.தென்மராட்சி கச்சாய்ப் பகுதியில் வேலை கிடைக்கவில்லை என்ற விரக்தியில் இளைஞர் ஒருவர்  நேற்றைய தினம் தற்கொலை   செய்துள்ளார்

கிருஷ்ணபிள்ளை சத்தியசீலன்(வயது- 29) என்பவரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டவராவார்.

தற்கொலை செய்து கொண்டுள்ள இளைஞன்  கடிதம் ஒன்றை பொலிஸார் மீட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

அதில் “பல்கலைக்கழகப் படிப்பை முடித்தும் எனக்கு வேலை கிடைக்கவில்லை…எனது குடும்பத்துக்கு நான் ஒன்றுமே செய்யவில்லை,படித்தும் வேலை கிடைக்கவில்லை” எனக் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

இந்த நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் கொடிகாமம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கச்சாய்தற்கொலைபட்டதாரி இளைஞன்பொலிஸார்
Comments (0)
Add Comment