மேற்படி பகுதி கடந்த 2015ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் 29ஆம் திகதி விடுவிக்கப்பட்டது. அன்ரனிபுரத்தில் 40 மீனவக் குடும்பங்கள் மீளக்குடியேறத் தயாராகி வருகின்றன. அதாவது, விடுவிக்கப்பட்ட பகுதிகளில் கொட்டில்கள் அமைத்து மீளக்குடியேறினால் மாத்திரமே வீட்டுத்திட்டம் வழங்கப்படும் என அதிகாரிகள் கூறியதையடுத்து, கொட்டில்கள் அமைத்து மீளக்குடியேற தயாராகி வருகின்றோம் என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
ஆனால்இ மீளக்குடியேறும் போது, எங்கள் தொழில் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு கடற்கரையிலுள்ள இராணுவத்தினரின் மண் அணைகள் தடையாகவுள்ளன. எங்கள் படகுகளை கடலுக்குச் கொண்டு செல்ல முடியாத வகையில் இந்த மண் அணைகள் காணப்படுகின்றன. ஆகையால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மண் அணைகளை அகற்றித் தந்தால் நாங்கள் மீளக்குடியேறி, தொழில் நடவடிக்கைகளைச் செய்வதுடன், வீட்டுத்திட்டங்களைப் பெற்றுக்கொள்ளவும் இலகுவாக இருக்கும் என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.