10ஆம் திகதி அ.கை.விடுதலையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

கிளிநொச்சி மாவட்ட பொது அமைப்புக்கள் இணைந்து எதிர்வரும் 10ஆம் திகதி தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை வலியுறுத்தி நடத்தவுள்ள போராட்டத்திற்கு இலங்கை ஆசிரியர் சங்கம் தமது பூரண ஆதரவை வழங்குவதாக அறிவித்துள்ளது.

இது தொடர்பாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் கிளிநொச்சி மாவட்டக் கிளையின் பொதுச்செயலாளர் தி.சிவரூபன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தமிழ் அரசியல் கைதிகள் தமது விடுதலையை வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்து வரும் நிலையில் அவர்களது விடுதலையை விரைவுபடுத்தக்கோரி கிளிநொச்சி மாவட்டப் பொது அமைப்புக்கள் இணைந்து முன்னெடுக்கும் இப்போராட்டத்திற்கு பூரண ஆதரவைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

போர் முடிவடைந்து 7 வருடங்கள் கடந்த நிலையில் இவர்களது விடுதலை இழுத்தடிக்கப்படுவது ஏற்றுக்கொள்ள முடியாததாகும். பல குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு குற்றவாளிகள் என அடையாளப்படுத்தப்பட்ட பலருக்கு இந்த அரசாங்கம் அவற்றிலிருந்து விடுவிப்பு வழங்கியுள்ளது. புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்து ஒரு வருடம் கடந்த நிலையிலும் அரசியல் கைதிகள் விடுதலையில் மட்டும் இவ்வாறான இழுத்தடிப்புக்கள் ஏற்றுக்கொள்ளமுடியாத்து. எனவே, அரசாங்கம் அரசியல் கைதிகளின் விடுதலையை விரைவுபடுத்த வேண்டும். இதற்காக குரல் கொடுக்க அனைத்து பொது அமைப்புக்களும் முன்வர வேண்டும் என மேலும் தெரிவிக்கப்பட்டள்ளது.

அமைப்புஅரசியல்ஆர்ப்பாட்டம்கிளிநொச்சிகைதிதமிழ்பொதுமாவட்டம்வலியுறுத்தல்விடுதலை
Comments (0)
Add Comment