11 மாடி கட்டவிபத்தில் இறந்தவர்கள் எண்ணிக்கை 58ஆக உயர்வு

சென்னை மெளலி வாக்கத்தில் கடந்த 28ம் தேதி, 11 மாடி கட்டடம் இடிந்து விழுந்தது. இந்த கோர விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி கடந்த 6 நாட்களாக நடைபெற்று வருகிறது. இன்று மதியம் வரை ஒரு குழந்தை உள்பட 10 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.  இதனையடுதது கட்டட இடிபாடுகளில் சிக்கி  பலியானவர்களின் எண்ணிக்கை 58 ஆக உயர்ந்துள்ளது.

மீட்பு பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது. கட்டட இடிபாடுகளுக்குள் 72 பேர் சிக்கியிருப்பதாக அரசு தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன. ஆனால் இறப்பு  எண்ணிக்கை மற்றும் மீட்கப்பட்டவர்களை கணக்கிடும் போது 77 பேர் கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுவரை 27 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.  இடிந்து விழுந்த கட்டிடத்தில் மீட்புப் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. இன்னும் 2 நாட்களில் இப்பணிகள் முடிவடையும் என்று தேசிய பேரிடர் மேலாண்மை மீட்புக் குழு தெரிவித்துள்ளது.

11 மாடி28ம் தேதி6 நாட்களாகஇடிந்துஇந்தகடந்தகட்டடம்கோரசிக்கியவர்களைசென்னைநடைபெற்றுபணிமீட்கும்மெளலிவருகிறதுவாக்கத்தில்விபத்தில்விழுந்தது
Comments (0)
Add Comment