பிரித்தானியாவில் இடம்பெற்ற செஞ்சோலை மாணவிகள் படுகொலை நினைவு நாள்

சிங்கள இனவாத அரச படைகளால் நிகழ்த்தப்பட்ட செஞ்சோலை மலர்கள் படுகொலை நினைவு வணக்க நாளான 14.08.2018 அன்று  பிரித்தானியாவின் பாராளுமன்ற வளாகத்தில்  புலம்பெயர் தமிழர்களால் நினைவுகூறப்பட்டது .

இந்நிகழ்வினை தமிழ்  இளையோர் அமைப்பினர்  ஒழுங்குபடுத்தியிருந்தனர்.  இந்நிகழ்வில் பெருமளவான புலம்பெயர் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட மாணவிகளுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தியதோடு, இப்படுகொலைக்கு நீதி வேண்டி ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.

செஞ்சோலை படுகொலையின் ஆறாத ரணங்கள்………
தமிழரின் நீண்ட சோக வரலாற்றில் `2006 ஆகஸ்ட் 14′ ஈனர் படைகளின் ஈவிரக்கமற்ற தாக்குதல்களால் பரிதாபகரமாகக் கொல்லப்பட்ட 61 பிஞ்சுகளின் குருதியால் எழுதப்பட்டுள்ளது. நான்கு மாத பச்சிளம் குழந்தையை கண்முன்னே துடிதுடிக்க சுட்டுக்கொல்லும் வெறிபிடித்த சிங்கள ஆக்கிரமிப்பாளர்களுக்கு இதுவொரு பொருட்டாக இல்லாது போனாலும் அழுது… அழுது… ஆறமுடியாமல் அகதிகளாய் அலையும் தமிழினத்தால் இதைத் தாங்கிக் கொள்ளும் சக்தியில்லையென்றே கூறவேண்டும்.

 

eelamjaffnamurdernorthsenjolaisrilankatamilnewsvanni
Comments (0)
Add Comment