புலம்பெயர் உறவால் முல்லை மாவட்டத்திற்கு மின்னிணைப்பு பெறுவதற்கான உதவி

குமுளமுனை சனசமூக நிலையம் மற்றும் குரவயல் பாடசாலையில் மின்னிணைப்பு செய்வதற்கான உதவியானது கடந்த வாரம் வழங்கப்பட்டுள்ளது.

குறித்த உதவியானது பிரான்சு நாட்டில் வசிக்கும் புலம்பெயர் தமிழர் ஒருவரால் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்கள் ஊடாக சம்மந்தப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கடந்த 19.12.2015ம் நாளன்று முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் குரவயல் பாடசாலையிலும் குமுளமுனை சனசமூக நிலையத்திலும் இவ்வுதவி வழங்கல் நிகழ்வுகள் நடைபெற்றன. இந்நிகழ்வுகளில் குரவயல் பாடசாலையின் மின்னிணைப்பிற்காக ரூபா இருபதாயிரத்தையும், குமுளமுனை சனசமூக நிலைய மின்னிணைப்பிற்காக ரூபா இருபத்தைந்தாயிரத்தையும் ரவிகரன் அவர்கள் நேரடியாக சென்று வழங்கியுள்ளார்.

இது தொடர்பில் ரவிகரன் அவர்கள் கருத்து தெரிவிக்கையில், குரவயல் மற்றும் குமுளமுனை பகுதிகளில் முன்னெடுக்கப்பட்ட குறைகேள் சந்திப்புக்களில், குரவயல் பாடசாலை நிர்வாகமும் குமுளமுனை சனசமூகம் சார்பாக அப்பகுதி இளைஞர்களும் மின்னிணைப்பிற்கான உதவியை கோரியிருந்தனர். அந்தவகையில் அவர்களால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை நிறைவேற்றும் முகமாக மின்னிணைப்பிற்கான உதவிகளை பிரான்சில் வசிக்கும் புலம்பெயர் உறவான கிருஸ்ணபிள்ளை ரவீந்திரன் அவர்கள் வழங்க முன்வந்ததாகவும் அவர் ஆற்றிய இச்சமூகப்பணிக்கு நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவிப்பதாகவும் தனது உரையில் குறிப்பிட்டார்.

உதவிஉறவுகுமுளமுனைகுரவயல்சனசமூகம்பாடசாலைபுலம்பெயர்மின்னிணைப்பு
Comments (0)
Add Comment