கருத்திட்ட முகாமைத்துவ இளைஞர் விவகார தெற்கு அபிவிருத்தி அமைச்சின் கீழ் இயங்கிவரும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் வருடம் தோறும் நடாத்திவரும் தேசிய இளைஞர் விளையாட்டு விழாவின் 30 ஆவது தேசிய இளைஞர் விளையாட்டு விழா மாத்தறை கொட்டவிலவில் அமைந்துள்ள மாவட்ட பொது விளையாட்டு மைதானத்தில் ஆரம்பமாகி இடம்பெற்றுவருகிறது
இந்த நிகழ்வின் ஆரம்ப நிகழ்வானது 25.10.2018 அன்று மாலை இலங்கை சனநாயக குடியரசின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களது பங்குபற்றுதலுடன் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் பணிப்பாளர் நாயகம் சட்டத்தரணி ஏரந்திக்க வெலியங்க அவர்களது தலைமையில் இடம்பெற்றது.
நிகழ்வில் கருத்திட்ட முகாமைத்துவ இளைஞர் விவகார தெற்கு அபிவிருத்தி அமைச்சின் அமைச்சர் சாகல ரத்னாயக்க உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் அமைச்சின் செயலாளர் அதிகாரிகள் தேசிய இளைஞர் சேவைகள் மன்ற அதிகாரிகள் இலங்கையில் அனைத்து மாவட்டங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் இளைஞர் யுவதிகள் என பலர் கலந்துகொண்டுள்ளனர்