யாழ்ப்பாணம் அரியாலையில் அனுமதியற்று இயங்கிவந்த விடுதியில் இருந்த நிலையில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த விடுதி உரிமையாளர் உட்பட நால்வரையும் பிணையில் செல்ல நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேற்படி வழக்கு யாழ்.நீதிமன்ற நீதவான் பெ.சிவகுமார் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
சமூகவிரோதச் செயல்களில் ஈடுபட்டிருந்த குற்றச்சாட்டில் கடந்த 2 ஆம் திகதி குறித்த 4 பேரும் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர். அதற்கமைய 3 பெண்களையும் தலா ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான ஒவ்வொரு ஆள் பிணையிலும் விடுதி உரிமையாளரை இரண்டு இலட்சம் ரூபா பெறுமதியான ஆள் பிணையிலும் செல்ல நீதவான் உத்தரவிட்டார்.
இதேவேளை , நல்லூர் அம்மன் வீதியில் உள்ள விடுதி ஒன்றில் அனுமதியின்றி இயங்கி வந்த மசாஜ் நிலையத்தில் இருந்து கைது செய்யப்பட்ட மூன்று பேரையும் எதிர்வரும் 17அம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நேற்று முன்தினம் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.