மாந்தை கிழக்குப்பிரதேச செயலர் பிரிவில் 55 ஏக்கர் அரச காணியைத் தமது தேவைக்கு வழங்குமாறு கேட்டு படையினர் பிரதேச செயலருக்கு விண்ணப்பித்துள்ளனர். மாந்தை கிழக்குப் பிரதேசத்தில் ஆண்டான்குளத்தில் விடுதலைப் புலிகளின் மாவீரர் துயிலும் இல்லம் அமைக்கப்பட்டிருந்த இடத்தை அபகரித்த பாதுகாப்புப் படையினர் அருகாமையிலுள்ள விளையாட்டுக் கழகத்திற்குச் சொந்தமான காணியையும் சேர்த்து முள்ளுக் கம்பிவேலி அமைத்துள்ளனர்.
இந்த நிலையில் படையினர் துயிலும் இல்லத்திற்கு அருகாமையிலுள்ள அரசாங்கத்திற்குச் சொந்தமான 55 ஏக்கர் காணியையும் தந்துதவுமாறு பிரதேச செயலரிடம் கோரியுள்ளனர். இவர்களின் கோரிக்கையை பிரதேச செயலர் ஏற்றுக் கொள்ளவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.