இந்த விமானம் இரணைத்தீவில் இருந்து வடபகுதியில் சுமார் 4 கடல் மைல்களுக்கு அப்பால் கடலில் தரைமட்டத்தில் மூழ்கியிருந்தது. இதனை மீட்கும் பணிகள் இவ்வாண்டு மே மாதம் 3ம் திகதி முதல் 6ம் திகதி வரையில் இடம்பெற்றன. இந்த விமானத்தில் 4 ரஷ்ய விமானிகள் உட்பட 7 விமான சிப்பந்திகளும் 48 பயணிகளும் 3 விமான உபசரணையாளர்களும் இருந்தனர். இந்த விமானத்தில் இருந்து கண்டெடுக்கப்பட்ட பயணிகளின் எலும்புகள், ஆடைகள் போன்ற பொருட்கள் ஜனவரி மாதம் 11,12ம் திகதிகளில் துரையப்பா மைதானத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும். பயணிகளின் உறவினர்கள் அன்றைய தினம் அங்கு வந்து அப்பொருட்களை அடையாளம் காட்டுமாறு பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.