நாட்டில் பரவலாக் கொண்டாடப்பட்ட தைப்பொங்கல் விழா

உழவர் திருநாளாம் தைத்திருநாளை வெடி ஓசை வானைப்பிளக்க மிகவும் உற்சாகத்துடன் மக்கள் பொங்கல் பானை ஏற்றி பொங்கல் பொங்கியமையை இன்று செவ்வாய்க்கிழமை 2014-01-14 பல்வேறு பகுதியிலும் காணக்கூடியதாக இருந்தது. விவசாயிகள் அனைவரும் வயலில் விளைந்த அரிசியில் இன்றைய தினம் பொங்கல் பொங்கி  சூரிய பகவானுக்கு படையலிட்டு நன்றி செலுத்துவர்.

அதன்படி வீடுகள், ஆலயங்கள், வியாபார நிலையங்கள், வேலைத்தளங்கள் மற்றும் பொது இடங்களிலும் மக்கள்  பொங்கல் செய்வது வழக்கம். அதற்கமைய இன்றைய தைத்திருநாளிலும் பல்வேறு இடங்களிலும் கோலாகலமாக பொங்கல் விழா இடம்பெற்றது. இதேவேளை, ஆலயங்களிலும் விசேட வழிபாடுகளும் ரதோற்சவமும் இடம்பெற்றன.

திருவிழாபொங்கல்
Comments (0)
Add Comment