அதன்பிறகு 4 பிரிவுகளாக ஆஜர்படுத்தப்பட்ட சந்தேக நபர்களில் முதலாவதாக ஆஜர்படுத்தப்பட்ட 43 பேரையும் எதிர்வரும் ஜூன் மாதம் 3ஆம் திகதி வரையும் இரண்டாவதாக ஆஜர்படுத்தப்பட்ட 39 பேரை ஜூன் மாதம் 4ஆம் திகதி வரையும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். மூன்றாவதாக ஆஜர்படுத்தப்பட்ட 33 பேரையும் 4 ஆவதாக ஆஜர்படுத்தப்பட்ட 14 பேரையும் ஜூன் மாதம் 1ஆம் திகதி வரையும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
இதேவேளை குறித்த நபர்கள் ஆஜர்படுத்தப்பட்ட போது வழக்கறிஞர்கள் எழுந்து நின்று பொலிஸாருடன் இணைந்து பிணை வழங்க எதிர்ப்பு தெரிவித்தனர். யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் சந்தேக நபர்களை தடுத்து வைக்கும் அளவுக்கு இடம் போதமையால் உடனடியாக நீதிமன்றத்தில் இருந்து அனைவரும் அனுராதபுரம் சிறைச்சாலைக்கு மாற்றப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் வித்யாவின் கொலை தொடர்பில் ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட 8 சந்தேநபர்களின் விளக்கமறியல் உத்தரவு, எதிர்வரும் ஜூன் முதலாம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தின் மற்றுமொரு சந்தேக நபரான கொழும்பில் கைது செய்யப்பட்ட நபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு பொலிஸார் அதீத நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.