மட்டு காத்தான்குடியின் த.வி.பு தகடு,குப்பி,கைக்குண்டு மீட்பாம்?

மட்டக்களப்பு, காத்தான்குடி மாவிலங்குதுறை பகுதியிலுள்ள வெற்றுக் காணி ஒன்றிலிருந்து, த.வி.பு என பொறிக்கப்பட்ட இலக்கத்தகடு, கைக்குண்டு, சேதமடைந்த நிலையிலான அடையாள அட்டை மற்றும் பழுதடைந்த நிலையிலான சயனைட் குப்பி போன்றவற்றை  நேற்று  மாலை மீட்டுள்ளதாக காத்தான்குடி ஸ்ரீ  பொலிஸார் தெரிவித்தனர்.
மாவிலங்குதுறை கிராமத்திலுள்ள காளிகோவில் வீதியில் தங்கரசா தவேந்திரன் என்பவருக்கு சொந்தமான காணியில் சுற்று வேலி அமைப்பதற்காக குழி வெட்டிக் கொண்டிருந்த போது, மேற்கண்ட பொருட்கள் காணப்பட்டுள்ளன.
குறித்த கைக்குண்டு மற்றும் சயனைட் குப்பி மற்றும் த.வி.பு என பொறிக்கப்பட்ட இலக்கத்தகடு பழுதடைந்த நிலையிலான அடையாள அட்டை என்பவற்றை மீட்டதுடன், கைக்குண்டு செயலிழக்கச்; செய்யப்பட்டதாக ஸ்ரீ பொலிஸார் தெரிவித்தனர்.
காத்தான்குடிகுப்பிகைக்குண்டுதகடுபோலீஸ்மட்டக்களப்புவிடுதலைப்புலிகள்
Comments (0)
Add Comment