மயிலிட்டி ஆயுதக்கிடங்கை உடனடியாக இடம்மாற்றுங்கள்!

மயிலிட்டிப் பகுதியில் உள்ள ஆயுதக் கிடங்கினை இடமாற்றம் செய்யுமாறு யாழ் மாவட்ட இராணுவக்  கட்டளைத் தளபதியிடம் வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் வேண்டுகோள் விடுத்தார்.

இது தொடர்பில் வட மாகாண முதலமைச்சர் தகவல் தெரிவிக்கையில் ,

சில தினங்களிற்கு முன்பு யாழ் மாவட்ட இராணுவக் கட்டளைத் தளபதி மகேஸ் சேனநாயக்காவினை சந்தித்திருந்தேன் இதன்போதே    இக் கோரிக்கையினையும் முன் வைத்தேன்.

குறிப்பாக தென்னிலங்கையில் ஓர் ஆயுதங்கிடங்கு வெடித்தமையினால் ஏற்பட்ட விளைவினை சுட்டிக்காட்டியதோடு

மயிலிட்டிப் பகுதியில் உள்ள ஆயுதக் கிடங்கினை இடமாற்றம் செய்யுமாறு கோரியதோடு இராணுவம் எவ்வளவுதான் ஒத்துழைத்தாலும் காலாகலத்தில் இராணுவத்தினரின் எண்ணிக்கையினைக் அகற்றி  பொலிசாரின் கையில் வழங்க வேண்டும். என்றேன்.

இதற்கு இராணுவக் குறைப்பு என்பது அரசியல் விடயம் இருப்பினும் விரைவில் புலோப்பளையில் 400 ஏக்கரும் காங்கேசன்துறையில் 200 ஏக்கர் நிலமும் விடப்படவுள்ளது என்பதனையும் ஆயுதக் கிடங்கு இடமாற்றம் தொடர்பில் நினைவில் வைத்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.எனத் தெரிவித்தார்.

இதேவேளை தற்போதைய யாழ். மாவட்ட இராணுவத் தளபதி பல விதங்களில் நன்மை செய்து கொண்டு வருகின்றார். அதேபோல் இராணுவம் இதுவரை காலமும் இருந்த மன நிலையை மாற்றி இராணுவத்திற்கும் பொது மக்களிற்கும் ஓர் சுமூக உறவை வளர்க்க நினைக்கின்றார். அதை நான் வரவேற்கின்றேன்.

இருப்பினும் எம்மைப் பொருத்தமட்டில் இராணுவம் இங்கு குடி கொண்டிருப்பதை குறைக்க வேண்டிய அவசியம் இருக்கின்றது. என்றார்.

ஆயுதக்கிடங்குஇடம்மாற்றம்இராணுவம்உறவுகள்பொதுமக்கள்மயிலிட்டிவிக்னேஸ்வரன்ஸ்ரீலங்கா
Comments (0)
Add Comment