குறித்த குளம் யுத்த காலத்தில் சேதமடைந்துள்ளதாகவும், குறித்த குளத்தினை புனரமைப்பதற்கு அமைச்சர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை என மக்கள் கவலை தெரிவிக்கின்றனர். குறித்த குளத்தினை பயன்படுத்தி 50 ஏக்கர்களிற்கு மேல் விவசாய நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகவும், தற்போது விவசாயம் செய்ய முடியாதுள்ளதாகவும் விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
காலபோக நெற்செய்கை செய்யப்படும் சந்தர்ப்பத்தில் குறித்த குளத்தில் தேக்கப்படவேண்டிய நீர் பயிர்களை அழித்து செல்வதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர். இதேவேளை அளவிற்கதிகமான நீர் கட்டுப்பாடின்றி வெளியேறுவதனால் குறித்த குளத்தின் கீழ் உள்ள முறிகண்டி, வசந்தநகர், செல்வபுரம், இந்துபுரம் ஆகிய நான்கு கிராமங்களில் வெள்ளபாதிப்புகளிற்கு மக்கள் ஆண்டு தோறும் முகம் கொடுப்பதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
வடமாகாணத்தை சேர்ந்த இரண்டு அமைச்சர்கள் உள்ளதாகவும், விவசாயம், நன்னீர் மீன்பிடியை ஊக்குவிக்கும் நோக்குடன் குளத்தினை புனரமைப்பு செய்து தரவில்லை என குற்றம் சாட்டும் பிரதேச மக்கள், இவ்வாறான குளம் இருப்பது தொடர்பில் அவர்களிற்கு தெரிந்திருக்குமோ என்ற கேள்வி உள்ளதாகவும் குறிப்பிடுகின்றனர்.
குறித்த குளத்தினை புனரமைப்பு செய்து விவசாயம், மற்றும் நன்னீர் மீன்பிடியை ஊக்குவிக்கவும், வெள்ள பாதிப்புகளில் இருந்து பாதுகாக்கவும் சம்மந்தப்பட்டவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதேச மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.