வட கிழக்கு மாணவர்கள் கல்வியில் பின்தங்கிய நிலை!

அண்­மையில் வெளி­யா­கி­யுள்ள 2015ஆம் ஆண்­டுக்­கான கல்விப் பொதுத் தரா­தர சாதா­ர­ண­தர பரீட்சை பெறு­பேற்று முடி­வு­க­ளின்­படி வடக்கு, கிழக்கில் உள்ள மாவட்­டங்கள் இறு­தி­நி­லை­யினை அடைந்­தமை இது­வரை நிக­ழாத துர்ப்­பாக்­கியம் என ஆசி­ரியர் சங்கம் கவலை வெளி­யிட்­டுள்­ளது.

இது­ தொ­டர்பில் அச்­சங்கம் வெளி­யிட்­டுள்ள செய்­திக்­கு­றிப்பில் மேலும் குறிப்­பி­டப்­பட்­டுள்­ள­தா­வது,

யுத்த காலங்­க­ளிலும், அதற்கு முன்­னரும் வட­கி­ழக்கு மாகா­ணங்­களின் கல்வித் தரம் உயர்ந்தே காணப்­பட்­டது. இதற்­கான சரி­யான அளவு கரு­வி­யாக கல்விப் பொதுத் தரா­தர சாதா­ரணதர பரீட்­சையை மட்­டுமே கொள்ள முடியும். தரம் 5 புலமைப் பரிசில் பரீட்­சை­யையோ, க.பொ.த. உயர்­தர பரீட்­சை­யையோ கொள்ள முடி­யாது. க.பொ.த. உயர்­தர பரீட்­சையின் சித்­திக்கு பல கார­ணிகள் உள்­ளன. ஆனால் க.பொ.த. சாத­ர­ண­தர சித்­திக்கு தனியே பாட­சாலைக் கல்­வியை மட்­டுமே கூற­மு­டியும்.

க.பொ.த. உயர்­தரம் கற்­ப­தற்கு தகுதிபெற்றோர் வரி­சையில் யாழ்ப்­பாண மாவட்டம் 21ஆவது இடத்­திற்கு தள்­ளப்­பட்­டி­ருப்­பது அதிர்ச்­சியும், வேத­னையும் தரும் விட­ய­மாகும். இதே­வேளை, நாட­ளா­விய ரீதியில் ஒன்­பது இடங்­க­ளுக்­குள்ளும் வட­கி­ழக்கு மாகா­ணங்­களின் மாவட்­டங்கள் எவையும் இடம்­பெ­ற­வில்லை.

மன்னார் மாவட்டம் 10ஆம் இடத்­திலும், அம்­பாறை மாவட்டம் 13ஆம் இடத்­திலும், வவு­னியா மாவட்டம் 16ஆம் இடத்­திலும், மட்­டக்­க­ளப்பு மாவட்டம் 17ஆம் இடத்­திலும், யாழ்ப்­பாணம் மாவட்டம் 21ஆம் இடத்­திலும், திரு­கோ­ண­மலை மாவட்டம் 23ஆம் இடத்­திலும், முல்­லைத்­தீவு மாவட்டம் 24ஆம் இடத்­திலும், கிளி­நொச்சி மாவட்டம் 25ஆம் இடத்­திலும் காணப்­ப­டு­கின்­றன. இந்த தர­வ­ரி­சை­யா­னது எப்­போதும் நிக­ழாத ஒன்­றா­கவே காணப்­படு­கின்­றது.

தமிழர் பிர­தே­சங்­களில் இத்­த­கைய நிலை ஏற்­பட்­டி­ருப்­ப­தற்கு பல கார­ணங்கள் இருந்­தாலும் மாகாண மட்­டத்தில் உள்ள பல குறை­பா­டுகள் அதற்கு முழுக்­கா­ர­ண­மாக அமை­கின்­றன.

குறிப்­பாக முறை­யற்ற ஆசி­ரிய இட­மாற்­றங்கள், முறை­யற்ற அதி­கா­ரி­களின் இட­மாற்­றங்கள், அர­சியல் தலை­யீ­டுகள், கல்­வியில் அனா­வ­சி­ய­மான வெளி­யாரின் தலை­யீ­டுகள், இவற்­றை­விட கல்வி அதி­கா­ரிகள், அதி­பர்கள், ஆசி­ரி­யர்­களின் சுய­மான சிந்­த­னைக்கு ஏற்­ப­டுத்­தப்­படும் முட்­டுக்­கட்­டைகள் ஆகி­ய­வையே இன்­றைய வீழ்ச்­சிக்கு கார­ண­மாக அமை­கின்­றன.

இவை எல்­லா­வற்­றையும் விட வட­கி­ழக்கு மாகா­ணங்கள் கல்­வியில் திட்­ட­மிட்டு அழி­கப்­ப­டு­கி­றது என்ற உண்மையை நாம் அனைவரும் உணரவேண்டும் என்பதோடு இன்னும் வெளிப்படுத்த முடியாத அபாயகரமான நிலைமைகள் உள்ளன என்பதனை இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் எச்சரிக்கையுடன் சுட்டிக்காட்டி நிற்கின்றது என செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கல்விகிளிநொச்சிகிழக்குதாயகம்மன்னார்மாகாணங்கள்மாணவர்கள்யாழ்மாவட்டம்வடக்கு
Comments (0)
Add Comment