அவுஸ்திரேலியாவின் புகலிடக்கோரிக்கையாளர்கள் தொடர்பான கடும்போக்குக் கொள்கைளின் பிரகாரம் அந்நாட்டிற்கு சட்டவிரோதமாக படகுகளில் வருபவர்கள் பசுபிக் சமுத்திர நாடுகளான நாவுறு மற்றும் பபுவா நியூகினியிலுள்ள தடுப்பு நிலையங்களுக்கு அனுப்பப்பட்டு வருகின்றனர்.
அதேசமயம் அவர்கள் அகதிகள் என்பது உறுதிப்படும் பட்சத்திலும் அவுஸ்திரேலியாவில் மீளக் குடியமர்த்தப்படுவதற்கு முட்டுக்கட்டைகளை எதிர்கொண்டுள்ளனர்.
இந்நிலையில் உயர் நீதிமன்ற தீர்ப்பொன்றையடுத்து சுமார் 267 அகதிகள் நாவுறுவிற்கு அனுப்பப்படுவதை தடுத்து நிறுத்துவதற்கு மாநில அரசாங்கங்களும் தேவாலயங்களும் மனித உரிமைச் செயற்பாட்டாளர்களும் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ள நிலையிலேயே மேற்படி மருத்துவமனையின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நேபாள புகலிடக்கோரிக்கையாளர்களான தம்பதிக்குப் பிறந்த குறிப்பிட்ட ஆஷா என அழைக்கப்படும் ஒரு வயதுக் குழந்தை, நாவுறுவிலுள்ள தடுப்பு நிலையத்தில் வெந்நீரால் உடல் புண்ணாகிய நிலையில் கடந்த ஜனவரி மாதம் மருத்துவ சிகிச்சைக்காக அவுஸ்திரேலிய பிறிஸ்பேன் நகருக்கு கொண்டுவரப்பட்டது.
இந்நிலையில் அவுஸ்திரேலிய பிரதான நிலப் பரப்பிற்கு வந்துள்ள அனைத்து புகலிடக்கோரிக்கையாளர்களையும் கடலுக்கு அப்பாலான தடுப்பு நிலையங்களுக்கு மீள அனுப்புவதற்கு நிர்ப்பந்திக்கும் அந்நாட்டு உயர் நீதிமன்றத் தீர்ப்பால் ஆஷாவும் ஏனைய 36 குழந்தைகளும் அவுஸ்திரே லியாவை விட்டு வெளியேற்றப்படும் நிர்ப்பந்தத்தை எதிர்கொண்டுள்ளனர்.