தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

அகதி குழந்தையை மீண்டும் நவுரு க்கு அனுப்ப மருத்துவமனை மறுப்பு!

navuru-003அவுஸ்­தி­ரே­லிய மருத்­து­வ­ம­னையொன்று புக­லி­டக்­கோ­ரிக்­கை­யா­ள­ரான குழந்­தை ­யொன்றை நாவு­று­வி­லுள்ள தடுப்பு நிலை­யத்­துக்கு திருப்பி அனுப்­பு­வ­தற்கு மறுப்புத் தெரி­வித்­துள்­ளது.

அவுஸ்­தி­ரே­லி­யாவின் புக­லி­டக்­கோ­ரிக்­கை­யா­ளர்கள் தொடர்­பான கடும்­போக்குக் கொள்­கைளின் பிர­காரம் அந்­நாட்­டிற்கு சட்­ட­வி­ரோ­த­மாக பட­கு­களில் வரு­ப­வர்கள் பசுபிக் சமுத்­திர நாடு­க­ளான நாவுறு மற்றும் பபுவா நியூ­கி­னி­யி­லுள்ள தடுப்பு நிலை­யங்­க­ளுக்கு அனுப்­பப்­­பட்டு வரு­கின்­றனர்.

அதே­ச­மயம் அவர்கள் அக­திகள் என்­பது உறு­திப்­படும் பட்­சத்­திலும் அவுஸ்­தி­ரே­லி­யாவில் மீளக் குடி­ய­மர்த்­தப்­ப­டு­வ­தற்கு முட்­டு­க்கட்­டை­களை எதிர்­கொண்­டுள்­ளனர்.

இந்­நி­லையில் உயர் நீதி­மன்ற தீர்ப்­பொன்­றை­ய­டுத்து சுமார் 267 அக­திகள் நாவு­று­விற்கு அனுப்­பப்­ப­டு­வதை தடுத்து நிறுத்­து­வ­தற்கு மாநில அர­சாங்­கங்­களும் தேவா­ல­யங்­களும் மனித உரிமைச் செயற்­பாட்­டா­ளர்­களும் நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுத்­துள்ள நிலை­யி­லேயே மேற்­படி மருத்­து­வ­ம­னையின் அறி­விப்பு வெளி­யா­கி­யுள்­ளது.

நேபாள புக­லி­ட­க்­கோ­ரிக்­கை­யா­ளர்­க­ளான தம்­ப­திக்குப் பிறந்த குறிப்­பிட்ட ஆஷா என அழைக்­கப்­படும் ஒரு வயதுக் குழந்தை, நாவு­று­வி­லுள்ள தடுப்பு நிலை­யத்தில் வெந்­நீரால் உடல் புண்­ணா­கிய நிலையில் கடந்த ஜன­வரி மாதம் மருத்­துவ சிகிச்­சைக்­காக அவுஸ்­தி­ரே­லிய பிறிஸ்பேன் நக­ருக்கு கொண்டுவரப்­பட்­டது.

இந்­நி­லையில் அவுஸ்­தி­ரே­லிய பிரதான நிலப் பரப்­பிற்கு வந்­துள்ள அனைத்து புக­லி­டக்­கோ­ரிக்­கை­யா­ளர்­களையும் கட­லுக்கு அப்­பா­லான தடுப்பு நிலையங்களுக்கு மீள அனுப்புவதற்கு நிர்ப்பந்திக்கும் அந்நாட்டு உயர் நீதிமன்றத் தீர்ப்பால் ஆஷாவும் ஏனைய 36 குழந்தைகளும் அவுஸ்திரே லியாவை விட்டு வெளியேற்றப்படும் நிர்ப்பந்தத்தை எதிர்கொண்டுள்ளனர்.

Comments
Loading...