விடுதலைப் புலிகள் இயக்க முன்னாள் உறுப்பினர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து நேற்றுமுன்தினம் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். கட்டாரில் தொழில் செய்து விட்டு நாடு திரும்பிய திருகோணமலையைச் சேர்ந்த சோமசுந்தரம் வசந்தகுமார் என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். ஒன்றரை வருடங்களுக்கு முன்னர் அவர் கட்டார் நாட்டுக்குத் தொழில் வாய்ப்பு பெற்றுச் சென்றுள்ளது விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்டவர் விடுதலைப் புலிகளை மீண்டும் உயிர்ப்பிக்கச் செய்யும் முயற்சியில் தேவியன், கோபி ஆகியோருடன் தொடர்பில் இருந்ததாகவும் பொலிசார் குற்றம்சாட்டியுள்ளனர். கைது செய்யப்பட்டவர் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரிடம் கையளிக்கப்பட்டுள்ளார். பயங்கரவாதத் தொடர்புகள் குறித்த தகவல்களைப் பெற்றுக் கொள்வதற்கு அவரிடம் தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.