அரசிடம் கையளித்து காணாமல் ஆக்கப்பட்ட எமது பிள்ளைகள் ஒப்படைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி 208 வது நாட்களாக எமது கவனயீர்ப்பு போராட்டத்தைமுன்னெடுத்துள்ளோம்.அந்தவகையில் எந்த தீர்வுமின்றி போராட்டம் தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில் எதிர்வரும் 24 மற்றும் 25 ஆம் திகதிகளில்அடையாள உண்ணாவிரதம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளோம்.அதற்கும் அரசு பதிலளிக்காத பட்சத்தில் அரசிற்கு சிறிது கால அவகாசம் வழங்குவதுடன் பதில் கிடைக்காத பட்சத்தில் போராட்டத்திலிருக்கும் தாய்மார்களால் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம் அறிவிக்கப்படும். மாதங்கள் கடந்துவிட்ட நிலையிலும் தொடர்ச்சியாக தெரு ஒரத்திலிருந்து எமது பிள்ளைகளுக்காக போராடிவருகிறோம். எமது மக்களுக்கும் புலம்பெயர்ந்துள்ள எங்கள் தாயக உறவுகளுக்கும் எமது போராட்டத்தை பலப்படுத்துமாறு கோரிக்கை விடுக்கிறோம் என தெரிவித்தார்.